அஜித்திற்கு வில்லனாகிறாரா தனுஷ்?… ஏகே 62-வில் விக்னேஷ் சிவன் செய்யபோகும் சம்பவம் : செட்டாச்சுன்னா தெறிமாஸ் தான்..!

Author: Vignesh
15 December 2022, 12:15 pm

நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். தற்போது துணிவு படத்தில் நடித்துள்ளார்.

வரும் பொங்கலை முன்னிட்டு துணிவு படம் ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் சில்லா சில்லா பாடல் தற்போது வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.

ajith dhanush - updatenews360

துணிவு படத்தினை அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் பணியாற்றவிருக்கும் அஜித் சில காலம் ஓய்விற்கு பிறகு அடுத்த ஆண்டு ஷூட்டிங்கை ஆரம்பிக்கவுள்ளார்.

இந்நிலையில் ஏகே 62 படத்தில் நடிகர் தனுஷ் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாகவும் இதற்கான ஷூட் அஜித்தின் டூர் முடிந்ததும் எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.

ajith dhanush - updatenews360

இப்படியொரு பெரிய பிளானை சைலெண்ட்டாக விக்னேஷ் சிவன் போட்டுள்ளாரா என்று பலர் ஆச்சரியப்பட்டும் இது உண்மையாக இருக்க வேண்டும் நடந்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறி வருகிறார்கள்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?