‘ஹாப்பி பர்த்டே பாப்பா.. லவ் யூ’.. இந்த பிரபல நடிகரை காதலிக்கிறாரா நடிகை ரெஜினா..? பிறந்தநாளில் வெளிவந்த புகைப்படம்..!

Author: Vignesh
15 December 2022, 1:15 pm

பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட்.

அருண் விஜய்யுடன் அடுத்ததாக இவர் நடித்துள்ள பார்டர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் நடிகை ரெஜினா தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இதில் தனது சமூக வலைத்தளத்தில் பிரபல நடிகர் சந்தீப் கிசன் ரெஜினாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ” பிறந்தநாள் வாழ்த்துகள் பாப்பா.. லவ் யூ.. எப்போதும் சிறந்ததே நடக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் ” என்று கூறியிருந்தார்.

regina -updatenews360

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும், இருவரும் காதலிக்கிறார்களா? எப்போது திருமணம்? என்பது போல் கேள்வி கேட்க துவங்கிவிட்டார்கள்.

  • Sivakarthikeyan Dhanush in Party Dance Video சிவகார்த்திகேயனுடன் குத்தாட்டம்.. VIBE MODEல் தனுஷ்… : மாஸ் வீடியோ!
  • Views: - 458

    0

    0