பாலியல் அத்துமீறல்… தலைமையாசிரியை அடித்து உதைத்த மாணவிகள் ; விடுதியிலேயே கட்டி வைத்த அதிர்ச்சி சம்பவம்!!

Author: Babu Lakshmanan
15 December 2022, 2:23 pm

கர்நாடகாவில் பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியை கல்லூரி மாணவிகளே அடித்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் ஸ்ரீரங்கட்டனா அருகே உள்ள கட்டேரி கிராமத்தில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி வளாகத்தில் இருக்கும் விடுதிக்கு அருகே உள்ள அறையில் அக்கல்லூரியின் தலைமையாசிரியர் சின்மயானந்த் மூர்த்தி தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்.

இவர் இரவு நேரங்களில் விடுதிகளை மேற்பார்வையிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிலையில், நேற்றிரவு மதுபோதையில் இருந்த சின்மயானந்த மூர்த்தி, விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமையை சக மாணவிகளிடம் உடனே கூறியுள்ளார். இதனை கேட்டு ஆத்திரமடைந்து ஒன்றுகூடிய மாணவிகள், தலைமையாசிரியை அடித்து உதைத்தனர். மேலும், அவரை விடுதியிலேயே கட்டி வைத்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!