இனி சுடுகாட்டுக்கு போக வேண்டா.. வீடு தேடி வரும் சுடுகாடு : அறிமுகமானது நடமாடும் தகன வாகனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 December 2022, 4:15 pm

தமிழகத்தில் முதன் முறையாக நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் அறிமுகப்படுத்தும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆத்மா அறக்கட்டளை தலைவர் வி.ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நிறுவன தலைவர் சகாதேவன், ரோட்டரி ஆளுநர் இளங்குமரன் ஆகியோர் பங்கேற்று, நடமாடும் எரியூட்டும் தகன வாகனத்தை துவக்கி வைத்தனர்.

கிராமங்களிலும் ஆத்மா மின் மயானம் சேவை செய்ய நடமாடும் எரியூட்டும் தகன வாகனத்தை அறிமுகப்படுத்தினர். கிராமப்புறங்களில் எரியூட்டுவதற்கு விறகு அல்லது சாண வரட்டி மூலம் உடலை தகனம் செய்வர். இதற்கு ரூ.15,000 வரை செலவு செய்தும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன் தகனம் செய்ய சுமார் 8 மணி நேரம் தேவைப்படும்.

ஆனால் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் மூலம் ஒரு மணி நேரத்தில் எரியூட்டி, இறந்தவரின் குடும்பத்திற்கு அஸ்தி வழங்கப்படும் என்று ரேட்டரி ஆத்மா நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

மேலும் நடமாடும் எரியூட்டும் தகன வாகனம், ஆத்மாவின் ஆம்புலன்சு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்படும் என்றும் முழுக்க முழுக்க கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி மட்டுமே தகனம் செய்யப்படும் என்றும் இந்த வாகனம் மாநகராட்சிக்கு வெளியே குடியிருப்பு பகுதி இல்லாத கிராம மயானம் மற்றும் விவசாய நிலத்தில் மட்டும் நிறுத்தி எரியூட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கிராமப்புறத்தில் வசிக்கும் மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் நடமாடும் எரியூட்டு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சடலத்தை எரியூட்ட ரூ7,500 கட்டணம் நிர்ணயக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  • Amaran Conducted Grand Ceremony of Success Meet கொண்டாடப்படும் அமரன்.. பிரம்மாண்ட விழா நடத்தும் படக்குழு : சிறப்பு விருந்தினர் இவருதான்!
  • Views: - 920

    0

    0