“காசு குடுத்து போனேன்னு அவரே சொல்லிருக்காரு” தயாரிப்பாளர் கே.ராஜனை சர்ச்சையில் சிக்க வைத்த பயில்வான்..!

Author: Udayachandran RadhaKrishnan
15 December 2022, 6:00 pm

தமிழ் சினிமாவில் சிறு சிறு முக்கிய கதாபாத்திரங்களிலும், பிரபல காமெடி நடிகராகவும் நடித்து பிரபலம் ஆனவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன். ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர் தற்போது தனி யூடியூப் சேனலை தொடங்கி சினிமா வட்டாரத்தில் நடக்கும் பல விஷயங்கள் குறித்து பேசி ட்ரெண்டிங் ஆகி வருகிறார். சினிமா துறையில் நடக்கும் விஷயங்களோடு விட்டு வைக்காமல், நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து பகிர்ந்து வருகிறார்.

KRajanBayilvanRanganatha_updatenews360

இதற்கு தயாரிப்பாளர் கே ராஜன், பயில்வான் ரங்கநாதன் பற்றி காவல் துறையில் பொய்யான விஷயங்களைப் பேசி அதன் மூலம் அவர் பிரபலம் அடைய நினைக்கிறார் என ஒரு புகார் மனு அளித்துள்ளார். இப்படி ஒரு பக்கம் இருக்க, அவ்வப்போது, தயாரிப்பாளர் ராஜன் அவர்களும் பிரபல நடிகர் நடிகைகள் அவர்கள் சம்பளம் குறித்த ஒரு சில விஷயங்களை பற்றி மேடைகளில் பேசியுள்ளார். அதன் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வலம் வருவது வழக்கம். இந்நிலையில், சமீபத்தில் கட்சிக்காரன் என்ற படத்தின் இசை வெளியிட்டு விழாவில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட இருவருமே வாடா போடா என்று ஒருமையில் பேசி இருந்தார்கள்.

அதிலும் ராஜன் மாமா பயலே போடா எச்சக்கலை நாயே என்று பயில்வான் ரங்கநாதனை கடுமையாக திட்டி இருந்தார். அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பயில்வான் ரங்கநாதன், கே ராஜன் குறித்து பகிரங்கமாக சில கருத்துகளை முன்வைத்தார். அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பேசியது அவர் தான், தயாரிப்பாளர் ராஜன் தான் என்னிடம் வம்பிழுத்தார். என் பெயரை இழுத்தால் பப்ளிசிட்டி கிடைக்கும் என அவர் அடிக்கடி என்னிடம் பிரச்சினை செய்கிறார். இவர் நடிகைகளின் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பேசவில்லையா? பெண்களைப் பற்றி பேசியது கிடையாதா? அவரை விடவா நான் மோசமா போய்விட்டேன்? எனக் கூறினார்.

KRajanBayilvanRanganatha_updatenews360

நான் இல்லாத போது என்னை பற்றி பேசுவது; நான் வருவதாக இருந்தால் அங்கிருந்து வெளிநடப்பு செய்வது என இருக்கிறார். நான் உன் குடும்பத்தை கெடுத்தேனா, இல்லை, உன் குடும்பத்தோடு நீ வாழாமல் இருக்க நான் காரணமாக இருந்தேனா? எனவும் காட்டமாக பேசினார். அதேபோல், அந்த ஆளு தான், நானும் பெண்களிடம் உறவாடியிருக்கிறேன், ஆனால், அதற்கு பணம் கொடுத்திருக்கிறேன் என்று அவரே யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்” என பயில்வான் ரங்கநாதன் குறிப்பிட்டு இந்தப் பேட்டி வைரலாகி வருகிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 526

    0

    0