இறந்ததாக கூறப்பட்ட நிலையில் உயிரோடு வந்த பிரபல நடிகை : ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்…!!

Author: Udayachandran RadhaKrishnan
15 December 2022, 5:36 pm

பல்வேறு இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிரபலமானவர் 72 வயதாகும் வீணா கபூர்.

இந்நிலையில் கடந்த வாரம், வீணா கபூரை அவருடைய மூத்த மகன், சொத்து பிரச்சனை காரணமாக கொலை செய்து விட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தகவல் சமூக வலைத்தளத்திலும் படு வேகமாக பரவிய நிலையில், இது முற்றிலும் வதந்தி என்றும், தான் உயிருடன் இருப்பதாக அவரே அறிவித்துள்ளது மட்டும் இன்றி, இதுகுறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது திண்டோஷி காவல் நிலையத்தில் FIR பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த வதந்தி குறித்து விளக்கம் அளித்துள்ள வீணா கபூர், “இது முற்றிலும் பொய்யான தகவல், வீணா கபூர் கொல்லப்பட்டார் என்பது உண்மை தான். ஆனால், அந்த வீணா கபூர் நான் அல்ல. அது வேறு ஒரு நபர்.

தற்போது நான் ஜூகுவில் வசிக்கவில்லை. தன்னுடைய மகனுடன் கோரேகானில் வசித்து வருகிறேன். நான் என் மகனுடன் வசித்து வருவதால் அப்படி மக்கள் நினைத்து விட்டார்கள்.

அதே போல் சில செய்தி நிறுவனங்கள், உண்மை என்ன என்பதை முழுமையாக விசாரிக்காமல் வதந்திகளை பரப்பி விட்டனர். ஆனால் நான் நலமாக இருக்கிறேன். யாரும் இப்படி வெளியான வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

அதே போல் இவருடைய மகனும் இந்த செய்தி தங்களை மிகவும் பதித்ததாகவும், போலீசார் தங்களுக்கு முழு ஆதரவு அளித்ததாக கூறியுள்ளார்.

மேலும் தற்போது நடிகை வீணாவின் மரணம் குறித்து அவதூறுகளை பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டோஷி காவல் நிலையத்தில் FIR பதிவு செய்து போலீசார் விசாரணையை துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மகனால் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நடிகை தற்போது திடீர் என நலமுடன் இருப்பதாக கூறியுள்ளது, பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை நிம்மதியடை செய்துள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 507

    0

    0