ஆபாச வாட்ஸ் அப் குரூப்பில் இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா : இளைஞருக்கு ஏற்பட்ட விபரீதம்.. நூதன மோசடி!!!
Author: Udayachandran RadhaKrishnan15 December 2022, 10:12 pm
கரூரில் இளைஞன் ஒருவருடைய செல்போன் எண் ஆபாச பட whatsapp குரூப்பில் இருப்பதாக போலீஸ் என்று கூறி நூதன முறையில் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் அருகே தாந்தோணிமலை பகுதியை சுரேந்தர் (வயது 28). இவருடைய மொபைல் எண்ணுக்கு கடந்த 13-ம் தேதியில் வந்த செல்போன் அழைப்பில் தாம்பரம் க்ரைம் போலிஸ் ஸ்டேசனில் இருந்து SI முருகன் பேசுவதாகவும், தங்களுடைய செல்போன் Whatsapp எண் ஆபாச படம் எடுக்கும் Whatsapp குருப்பில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இது சம்மந்தமாக ஆய்வாளர் விசாரிக்க வேண்டி இருப்பதால் சென்னைக்கு வரச்சொன்னதாகவும், வரவில்லை என்றால் கரூர் போலீசை வைத்து கைது பண்ணிருவேன் என்று மிரட்டியுள்ளார்.
பின்னர் புகார் தாரர் அவரிடம் பேசிய போது Fine யை கட்டி பிரச்சனையை முடித்துக்கொள் இல்லையேல் வீட்டிற்கு போலிஸ் வந்து அவமானப்படுத்தி விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
மேலும் குற்றவாளிகள் போனில் பேசும்போது பின்னணியில் வாக்கி டாக்கி ஒலியைக்கேட்டு போலிஸ் தான் பேசுகின்றனர் என்று நம்பி பயந்த சுரேந்தர், SI முருகன் என்று சொன்ன GPay number க்கு ரூ.5000 அனுப்பியதாகவும், பின்னர் புகார்தாரரும் அவரின் மனைவியும் இருக்கும் புகைப்படத்தை அனுப்பி மீதி பணத்தை அனுப்பவில்லை என்றால் கரூர் போலீசை வைத்து கைது செய்துவிடுவோம் என்று மிரட்டியதாகவும், மீதி பணத்தை கொடுக்காவிட்டால் வழக்கு பதிவு செய்து வீட்டிற்கு காவலர்களை அனுப்புவதாகவும்,அதை வைத்து அவமானப்படுத்துவதாகவும் மிரட்டியுள்ளனர்.
போனை வைத்த பிறகு True Caller-ல் சென்று பார்த்த போது Siddu siddu என்ற பெயரில் Spam பெயரில் ரிப்போர்ட் ஆகி இருப்பதாக கண்டதும் சந்தேகமடைந்து சுரேந்தர். கரூர் சைபர் க்ரைம் காவல் நிலையம் அணுகி புகார் அளித்தார்.
கரூர் மாவட்ட சைபர் க்ரைம் போலிஸார் விசாரணை செய்ததில் சென்னை தாம்பரம் க்ரைம் போலீஸ் முருகன் SI மற்றும் இன்ஸ்பெக்டர் என்று ஆள்மாறாட்டம் செய்து நம்ப வைத்து தன் மீது வழக்கு பதிவு செய்துவிடுவேன் என்று அச்சுருத்தி மிரட்டி ரூ.5000/- பணம் பறித்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட சைபர் க்ரைம் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்காணிப்பில், காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு வழக்கின் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி வரப்பட்ட நிலையில்
தனிப்படைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி கோவை மாவட்டதை சேர்ந்த மாதவன் வயவ (19), கெளவுதம் சித்தார்த் வயது (19), ஜான் பீட்டர் வயது (19), சந்தன சொர்ண குமார் வயது (19) ஆகிய 4 நபர்கள் என்பது தெரியவந்தது.
கோவைக்கு சென்ற தனிப்படை போலீசார் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஆய்வு செய்து நான்கு நபர்களை அடையாளங்களை உறுதி செய்து கோவை வடவள்ளியில் இருந்தவர்களை கைது செய்து விசாரணை செய்ததில் இவர்கள் இதேபோல் கோவை, ஈரோடு மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் குற்றசம்பவத்தில் ஈடுபட்டு உள்ளதாகவும், இவர்கள் மீது முன்னதாகவே இது போன்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகி விடுதலையானது தெரியவந்தது.
தொடர்ந்து நான்கு நபர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.