அடுத்தடுத்து காலியாகும் ஓபிஎஸ் கூடாரம் ; மேலும் ஒரு விக்கெட் அவுட்… இபிஎஸ் அணிக்கு தாவிய முக்கிய நிர்வாகி.. அதிர்ச்சியில் ஓபிஎஸ்!!
Author: Babu Lakshmanan16 December 2022, 10:17 am
சென்னை : ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த முக்கிய நிர்வாகி எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவியது ஓபிஎஸுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமானதை தொடர்ந்து, மீண்டும் இபிஎஸ் – ஓபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்தன. அதில், பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு கொண்ட எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழுவை கூட்டி, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தப் பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இப்படியிருக்கையில், ஜி20 மாநாடு தொடர்பான அனைத்து கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது உள்ளிட்ட விவகாரங்களால் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை நிர்வாகி என்பது உறுதியாகிவிட்டது. இதனால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்தவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
எனவே, ஓபிஎஸ் அணியினர் சிலர் மாற்றுகட்சிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் திடீரென திமுகவில் இணைந்தார். இந்த நிலையில், தற்போது கிருஷ்ணகிரியை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி இபிஎஸ் அணியில் இணைந்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கட்சி நிர்வாகிகளை நியமிப்பதில் ஏற்பட்ட குளறுபடிகளால், கட்சி நிர்வாகிகளுக்கு இடையே அதிருப்தி ஏற்பட்டது. மேலும் ஓபிஎஸ் ஆதாரவாளர்கள் தங்களுக்கு பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் வேதனை அடைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கட்சி தாவலில் ஈடுபடத் தொடங்கினர்.
அந்த வகையில், தற்போது ஓபிஎஸ் ஆதரவாளரான ஜே.கே.வெங்கடாசலம் இபிஎஸ் அணியுடன் இணைந்ததாக கூறப்படுகிறது. கிருஷ்ணகிரி தொகுதி அமைப்பாளராக பொறுப்பு வகித்த இவர் இபிஎஸ் அணியின் கே.பி.முனுசாமியை சந்தித்து அவரது ஆதரவாளர்களுடன் இபிஎஸ் அணியில் இணைந்தார்.
அடுத்தடுத்த நிர்வாகிகள் மாற்று கட்சிகளை நோக்கி படையெடுத்து வருவது ஓபிஎஸுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.