ஊருக்குள் கம்பீரமாக உலா வந்த சின்னத்தம்பி : பொள்ளாச்சியில் இருந்து களமிறங்கிய இரண்டு கும்கி யானைகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 December 2022, 1:22 pm

ஈரோடு : தாளவாடி பகுதியில் ஊருக்குள் உலா வரும் காட்டு யானையை வனப்பகுதியில் விரட்ட பொள்ளாச்சி டாப்ஸ்லிப்பில் இருந்து இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி, ஆசனூர், ஜீரகள்ளி உள்ளிட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அவ்வப்போது விவசாய நிலங்களில் நுழைந்து விவசாய பயிர்களை சேதம் செய்து வருகிறது.

இதே போல் ஆசனூர் வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானை அவ்வப்போது வாகனங்களை துரத்தி வருகிறது.

மேலும் பகல் நேரங்களில் ஊருக்கு உலா வருகிறது. அதனைத் தொடர்ந்து ஜீரகள்ளி வனச்சரகத்துக்குட்பட்ட கிராமங்களில் இரண்டு விவசாயிகளை தாக்கிய கருப்பன் என்கிற ஒற்றை காட்டு யானை தற்போது விவசாய நிலங்களில் நுழைந்து விவசாய பயிர்களை சேதம் செய்து வருகிறது.

மேலும் விவசாயிகளையும் துரத்தி வருவதால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து சின்னத்தம்பி, ராமு ஆகிய இரண்டு கும்கி யானைகளை வனத்துறையினர் வரவழைத்துள்ளனர்.

இன்று முதல் கும்கி யானைகள் கொண்டு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகளை அடர்ந்த வனப் பகுதியில் வரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

  • Ajithkumar in GBU இன்னும் ஏழே நாள் தான்.. Good Bad Ugly செம அப்டேட்!
  • Views: - 529

    0

    0