அரசு அதிகாரிகளால் மன உளைச்சல்… மரியாதையே இல்ல : எல்லாம் அவங்க தயவில்தான்.. வேதனையில் முதலமைச்சர்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 December 2022, 9:19 pm

மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தப்படுகிறது.

மத்திய ஆட்சியாளர்களின் தயவில்தான் புதுவையின் ஒவ்வொரு நகர்வும் இருப்பதால் மாநில அந்தஸ்து அவசியம் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் அரசு அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுவதாக முதலமைச்சர் ரங்கசாமி வேதனையுடன் கூறி உள்ளார்.


இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை செயல்படுத்தக்கூடாது என அதிகாரிகள் உள்ளனர்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் நிர்வாகம் செய்வதில் சிரமம் உள்ளது என ஆள்பவர்களுக்கு மட்டுமே தெரியும். ரங்கசாமிக்கு அதிகாரம் வேண்டும் என்பதால் மாநில அந்தஸ்து கேட்பதாக சிலர் கேலி செய்கின்றனர்.

புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருபவர்களுக்கு சிரமம் இருக்கக்கூடாது என்பதால் மாநில அந்தஸ்து கேட்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!