திருவண்ணாமலை அண்ணாமலையார் மகா தீப கொப்பரை இறக்கும் பணி துவக்கம்..!

Author: Vignesh
17 December 2022, 9:19 am

மகா தீபக்காட்சி திருவண்ணாமலையில் நேற்றுடன் நிறைவடைந்ததால் தீப கொப்பரை இறக்கும் பணி தொடங்கியுள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கடந்த 6-ந்தேதி விழாவின் நிறைவாக கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் மழை, புயலிலும் தொடர்ந்து 11 நாட்கள் எரிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தது. இந்த நிலையில் மலை உச்சியில் காட்சி தரும் மகாதீபம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து இன்று காலை மகாதீபம் ஏற்றப்பட்ட தீப கொப்பரை மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு பணி தொடங்கியுள்ளது.

கோவிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும்.

தொடர்ந்து வருகிற 6-ந்தேதி கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின் போது மகா தீப மை (தீப சுடர் பிரசாதம்) சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு அணிவிக்கப்படும். அதன்பிறகு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தீப ‘மை’ பிரசாதம் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?