மாஸ் காட்டிய இந்திய அணி… டி20 உலகக்கோப்பையில் 3வது முறையாக சாம்பியன் ; பார்வை மாற்றுத்திறனாளிகள் அணிக்கு குவியும் பாராட்டு

Author: Babu Lakshmanan
17 December 2022, 6:33 pm

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில், இந்தியா – வங்காளதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 278 ரன்கள் குவித்தது.

பின்னர், 279 என்ற கடின இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியால் 20 ஓவர் முடிவில் 157 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், 121 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது.

ஏற்கனவே, 2012, 2017ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி 3வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

  • Allu Arjun Pushpa2 box office collection புத்தாண்டில் புது மைல்கல்…அதிர வைக்கும் அல்லு அர்ஜுன் புஷ்பா2 வசூல்..!
  • Views: - 413

    0

    0