“விக்ரம்’ல வர அந்த சீன்..” இந்த ஒரே காரணத்துக்காக என்ன வேணாம்னு சொல்லிட்டாங்க.. வாய்ப்பை இழந்த தேவி பிரியா குமுறல்..!
Author: Vignesh18 December 2022, 7:15 pm
கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி, காளிதாஸ் ஜெயராம் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இப்படம் பெரும் வெற்றி வசூலில் ஈடுபட்டு 450 கோடிக்கும் மேல் உலகம் முழுவதும் வசூல் பெற்றது. விக்ரம் படம் முழுவதும் லோகேஷின் பேன் பாய் சம்பவமாக அமைந்தது குறித்து அனைவர்க்கும் தெரியும். இப்படத்தில் கைதி, பழைய விக்ரம் போன்ற பல reference பயன்படுத்தி லோகேஷ் ஒரு தனி யூனிவெர்ஸ் படைத்திருந்தார்.
இப்படி ஒரு நிலையில் இந்த கதாபாத்திரத்தை தவற விட்டுள்ளதாக பிரபல சீரியல் நடிகை தேவிப்பிரியா கூறியிருக்கிறார்.
சின்னத்திரை நடிகை தேவிப்பிரியா நீண்டகாலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே இடம் பிடித்தவர். தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது கனீர் குரலும் தான்.
சின்னத்திரையில் நீண்டகாலமாக நடித்துவரும் தேவிபிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார் தேவிபிரியா. சீமராஜா திரைப்படத்தில் சிம்ரனுக்கும், புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கும், தாமிரபரணி’ படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார்.
இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தேவி பிரியா, விக்ரம் படத்தின் டீனா கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுக்கும் வாய்ப்பை மிஸ் செய்தது குறித்து பேசி இருக்கிறார்.
அதில் அவர் கூறியதாவது:- ‘இந்த படத்தில் டீனா கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுப்பதற்காக ஆடிஷன் கூட சென்று, ‘டீனா ரிப்போர்ட்டிங் சார்’ என்ற வசனங்களை பேசி விட்டேன் என்றும், ஆனால், என்னுடைய குரல் மிகவும் சிறிதாக கேட்கிறது. எங்களுக்கு ஒரு பெரிய பெண் பேசுவது போல இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அந்த வாய்ப்பை தவறவிட்டதை எண்ணி நான் மிகவும் வருத்தம் அடைந்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.
#Devipriya About Missing #Teena Role In #Vikram pic.twitter.com/Ew7Q33K45A
— chettyrajubhai (@chettyrajubhai) December 17, 2022