மிஷ்கின் எனக்கு பண்ண மாதிரி துரோகம் வேற யாருக்கும் பண்ண கூடாது: நடிகர் விஷால் ஆதங்கம்..!
Author: Vignesh18 December 2022, 1:15 pm
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். திரைப்பட தயாரிப்பாளரும் கூட… டிரைப்பட தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் இளைய மகன் விஷால் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்தார்.
ஆக்ஷன் படங்களில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர், அவர் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியின் கீழ் படங்களைத் தயாரிக்கிறார்.
அர்ஜுனிடம் உதவி இயக்குநராகத் திரையுலகில் நுழைந்த விஷால் பின்னர் அவர் ஒரு நடிகரானார். செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்தார். படமும் வெற்றி பெற்றது.
பின்னர் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி மற்றும் மலைக்கோட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்தார். பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்த தொடர்ச்சியான படங்களைத் தொடர்ந்து, விஷால் தனது சொந்த தயாரிப்பு ஸ்டுடியோவை உருவாக்கினார்.
பின்னர் பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் மற்றும் பூஜை போன்ற லாபகரமான முயற்சிகளைத் தயாரித்து வேலை செய்துள்ளார். விஷால், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக அக்டோபர் 2015 இல், முந்தைய கமிட்டிக்கு எதிராக ஒரு இயக்கத்தைத் தொடங்கிய பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சர்ச்சைகளில் சிக்கிய விஷால் மீது பல விமர்சனங்களும் எழுந்தன. நடிகை லட்சுமி மேனனை காதலிப்பதாகவும் வதந்தி பரவியது. பின்னர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியை காதலிப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இதற்கெல்லம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சில ஆண்டுகளுக்கு முன் அனிஷா என்பவருடன் நிச்சயத்தார்த்தம் நடைபெற்றது,
ஆனால் திடீரென திருமணம் நின்று போனது. விஷால் தற்போது லத்தி திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். லத்தி வருகிற 22 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. படத்திற்கான புரோமோஷன் வேலைகள் நடைப்பெற்று வருகிறது. இந்தநிலையில், வெவ்வேறு ஊர்களுக்கு புரோமோஷனுக்காக பயணம் செய்யும் விஷால் பத்திரிக்கையாளர்களிடம் தன் அனுபவங்களையும் பகிர்ந்து வருகிறார்.
இதுவரை போலீஸ் வேடத்தில் சில படங்களில் உயர் அதிகாரியாக நடித்து வந்த விஷால் லத்தி படத்தில் கான்ஸ்டபிளாக நடித்து எதிரிகளிடம் இருந்து ஒரு 10 வயது சிறுவனை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் லத்தி படத்தின் கதை.
விஷாலுக்கு ஜோடியாக லத்தி படத்தில் நடிகை சுனைனா நடித்திருக்கிறார். மேலும் நடிகர் பிரபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருக்கிறார்.
கோவையில் விஷால் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அவரிடம் வெவ்வேறு வகையான கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
திருமணம் பற்றி கேட்டதற்கு கட்டிடம் கட்டிய பிறகே திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இயக்குனர் மிஷ்கினுடன் உங்களுக்கு என்னதான் பிரச்சினை என்று பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நடிகர் விஷால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நான் ஒரு தயாரிப்பாளராக தான் பிரச்சினை என்று தெரிவித்துள்ளார். மேலும் மிஷ்கிம் ஒரு நல்ல ஃபிலிம் மேக்கர். ஆனால் எனக்கு செய்தது மிகப்பெரிய துரோகம். எனக்கு செய்த துரோகத்தை வேறு எந்த தயாரிப்பாளருக்கும் செய்யக் கூடாது என்று தான் தெரிவித்து வருகிறேன். இருந்தாலும் அந்த துரோகத்தை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன் என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.