ஆதார் அட்டையில் பெயர் திருத்தம்… கையெழுத்து போட ரூ.200 லஞ்சம் ; கறாராக பேசும் அரசு மருத்துவர்.. வைரலாகும் வீடியோ!

Author: Babu Lakshmanan
17 December 2022, 9:11 pm

திருவள்ளூர் ;அரசு ஆணை உள்ளது எனக் கூறி கும்மமிடிபூண்டி அரசு மருத்துவமனை மருத்துவர் கையெழுத்து மற்றும் முத்திரை போடுவதற்கு 200 ரூபாய் கொடுத்தால் தான் போடுவேன் எனக் கூறும் வாட்ஸ் அப் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கோட்டைக்கரை அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவராக பணியாற்றுபவர் மேஜர் ஏவி ஆர் கென்னடி. இவர், மருத்துவப் பணியில் இருந்த போது ஆதார் அட்டை திருத்தம் செய்வதற்கு கையெழுத்தும் முத்திரையும் பெறுவதற்காக ஒருவர் சென்றுள்ளனர்.

அப்போது, அவரிடம் 200 ரூபாய் பணத்தை கட்டணமாக கேட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற கையெழுத்து போட வேண்டும் என்று முடிவு செய்வது தன்னுடைய தனிப்பட்ட விருப்பம் என்றும், கட்டணம் 200 ரூபாய் கொடுக்கவில்லை என்றால் கையெழுத்து போட முடியாது என்று சர்வ சாதாரணமாக கூறும் காட்சி வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தன்னிடம் ஆதார் அட்டை தவறாக உள்ள பெயர் திருத்தம் மேற்கொள்ள கையெழுத்து போட 200 ரூபாய் லஞ்சம் கேட்பதாக கூறி, இது போன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வாசகத்துடன் பகிரப்பட்டு வேகமாக வைரல் ஆகி வருகிறது.

  • Mohanlal Appreciates Lubber Pandhu Team லப்பர் பந்து வேற லெவல் படம்.. திறமையா எடுத்திருக்காங்க : உச்ச நடிகர் பாராட்டு!
  • Views: - 535

    0

    0