ஐபிஎல் போட்டி எல்லாம் ஜூஜிபி மேட்டர்… அதைவிட இதுதான் கஷ்டம் : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் விமர்சனம்!!
Author: Udayachandran RadhaKrishnan18 December 2022, 11:43 am
ஐபிஎல்லை விட பிஎஸ்எல் தான் கடினமான கிரிக்கெட் தொடர் என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான். இவர் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறார். டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 2வது இடத்தில் இருக்கிறார். இந்நிலையில், ஐபிஎல்லை விட பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) மிகவும் கடினமானது என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) உலகம் முழுவதையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிஎஸ்எல் தொடர் வெற்றியடையாது என அதை தொடங்குவதற்கு முன்னர் சில பேச்சுகள் இருந்தன. ஆனால் ஒரு வீரராக என்னைப்பொறுத்தவரை பிஎஸ்எல் உலக அரங்கில் தனது வெற்றியை பதிவு செய்துள்ளது.
உண்மை ஐபிஎல்லும் உள்ளது. ஆனால் பிஎஸ்எல்லில் விளையாடிய உலகெங்கிலும் உள்ள வீரர்களிடம் பிஎஸ்எல் கடினமா? இல்லை ஐபிஎல் கடினமா? என கேட்டால் அவர்கள் பிஎஸ்எல் தான் மிகவும் கடினமானது என கூறுவர் என்றார்.
மேலும், பிஎஸ்எல்லில் ஆடும் வீரர்கள் பலர் சர்வதேச அளவில் பெஞ்சில் உட்காரவைக்கப்படுகின்றனர். பாகிஸ்தான் அணி சிறந்த மாற்று வீரர்களை கொண்டுள்ளது. அதற்கு மிக முக்கிய காரணம் பிஎஸ்எல் தான். பிஎஸ்எல் அதற்கான பெருமையைப் பெற வேண்டும் என்றார். இவ்வாறு அவர் கூறினார்.
ஐபிஎல் போட்டி கடந்த 2008 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஐபிஎல் தொடர் இதுவரை 15 சீசன்களை கடந்து உலகில் வெற்றிகரமான தொடராக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் 16வது ஐபிஎல் சீசனுக்கான ஏலம் இந்த மாதம் கொச்சியில் வரும் 23ந் தேதி நடைபெறுகிறது. பிஎஸ்எல் 2016 ஆம் ஆண்டில் தொடங்கியது.
பாகிஸ்தான் அணி வீரர்கள் ஐபிஎல்லில் 2008 ம் ஆண்டு கலந்து கொண்டனர். அதன் பின்னர் பாகிஸ்தான் வீரர்கள் யாரும் ஐபிஎல்லில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.