வாய்ப்பு கேட்ட நடிகை முன்பு திமிர் பேச்சு : மேடையில் பொதுவெளியாக இப்படி பேசலாமா? சிக்கலில் சிவகார்த்திகேயன்!!
Author: Udayachandran RadhaKrishnan18 December 2022, 3:05 pm
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது டாப் நடிகராக வலம் வருகிறார், அஜித், விஜய்க்கு அடுத்தபடி என்ற இடத்திற்கு சிவகார்த்திகேயன் முன்னேறியுள்ளார்.
சமீபத்தில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் வெளியாகி மோசமான தோல்வியை சந்தித்தது. இதை தவிர இவர், மாவீரன், அயலான் என அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் ஒரு தனியார் டிவி டான்ஸ் நிகழ்ச்சியில் விருந்திரனாக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பாபா பாஸ்கர், நடிகை சினேகா மற்றும் சங்கீதா உள்ளனர்.
அந்த மேடையில் நடிகை சங்கீதா சிவகார்த்திகேயனுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார். அதாவது, அடுத்து ஆடப்போகும் 5 ஜோடிகளில் உங்களுக்கு யார் நன்றாக தோன்றுகிறதோ அவர்களை அடுத்த படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
அதற்கு சம்மதம் தெரிவித்த சிவகார்த்திகேயன், படம் முழுக்க இருக்கும் கதாபாத்திரத்தை கொடுப்பேன் என ஒப்புக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய சிவகார்திகேயன், தொலைக்காட்சியில் இருந்து வருபவர்களக்கு நடிப்பதை நான் பெருமையாக நினைப்பதை விட திமிராக நினைக்கிறேன்.
நான் வாய்ப்பு தேடிய போது, டிவியில் இருந்து வந்தவன் என்பதால் பலர் ஒதுக்கினார்கள். ஆனால் தொலைக்காட்சியில் இருந்து வருபவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை நாம் திமிராக நினைக்கிறேன் என பேசினார்.
நடிகை சங்கீதா மற்றும் சினேகா முன்பு அவர் இப்படி பேசியது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. மேலும் பொதுவெளியில் இப்படி திமிராக பேசலாமா என நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.