கைக்கு கைக்கொடுக்கும் கமல் : மாறுகிறதா அரசியல் களம்? மக்கள் நீதி மய்யத்தின் திடீர் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 December 2022, 4:44 pm

ராகுல் காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கவுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை நடத்தி வருகிறார்.

கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ந்தேதி தொடங்கிய இந்த யாத்திரை 100-வது நாளை எட்டியுள்ளது. இந்த யாத்திரை தற்போது ராஜஸ்தானில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ராகுல் காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கவுள்ளார். டெல்லியில் வரும் 24 ஆம் தேதி நடைபெற உள்ள பாதயாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

  • sr prabhu reply for comments on actor shri health issues விஷயம் தெரியாம பேசுறவங்க “Beep”… ஸ்ரீ விவகாரத்தில் அசிங்கமாக திட்டிய தயாரிப்பாளர்!
  • Close menu