சில்வர் குடத்தில் தலையை விட்டு சிக்கிக்கொண்ட செல்லப்பிராணி : வைரலாகும் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
18 December 2022, 8:33 pm

கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து பாலமலை செல்லும் ரோட்டில் திருமாலூர் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

இந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நாய் ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. நாய் வீட்டில் அங்குமிங்கும் விளையாடி கொண்டிருந்தது. திடீரென நாய் அங்கு இருந்த குடத்தில் தலையை விட்டு விளைாயடியது.

அப்போது எதிர்பாராத விதமாக குடத்திற்குள் நாயின் தலை மாட்டி கொண்டது. நாய் தலையை எடுக்க முயன்றும் முடியாததால் குரைத்தது. நாய் தொடர்ந்து குரைத்து கொண்டே இருந்ததால் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் வந்து பார்த்தனர்.

அப்போது நாயின் தலை குடத்திற்குள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக நாயை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.

உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து குடத்திற்குள் மாட்டிய நாயின் தலையை மீட்க முயற்சி செய்தனர். நாயின் கழுத்தில் எண்ணை தடவி மீட்பு பணி நடந்தது. 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குடத்திற்குள் சிக்கிய நாயை மீட்டனர்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?