கண் இமைக்கும் நேரத்தில் சீறிப்பாய்ந்த கார்கள் ; கோவையில் நடந்த 25வது சாம்பியன்ஷிப் போட்டி.. பைக்கர்களை குஷிப்படுத்திய ரேசர்கள்..!!

Author: Babu Lakshmanan
19 December 2022, 11:53 am

கோவை ; கோவையில் நடைபெற்ற 25வது சாம்பியன்ஷிப் போட்டியில் சீறிப்பாய்ந்த கார் மற்றும் பைக்குகள் பார்ப்போரை பரவசப்படுத்தியது.

கோவை செட்டிபாளையம் கரி மோட்டார்ஸ் பந்தயத்திடலில் நேற்று ஜேகே டயர் – FMSCIஇன் 25வது சாம்பியன்ஷிப் போட்டி பரபரப்பாக நடந்தது. ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி கப், எல்ஜிபி ஃபார்முலா போர் எல்.ஜி.பி நோவைஸ் கப் கேட்டகிரி, எண்டுரன்ஸ் கப் 60 மினிட் நான் ஸ்டாப் டிரைவிங் இன் 250cc பைக்ஸ் வித் 2 டிரைவர் சேஞ்ச் உள்ளிட்ட பிரிவுகளுக்கு போட்டிகள் நடைபெற்றன.

இந்தியா முழுவதும் இருந்து கார் மற்றும் பைக் ரேசர்கள் இந்த தேசிய அளவிலான போட்டிகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி இருக்கின்றனர். 25ஆம் ஆண்டு நடைபெறும் இந்த தேசிய அளவிலான போட்டியில் ஏராளமான வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்ற நிலையில், போட்டியின் போது அவர்களின் பர்ஃபார்மன்ஸ் அனல் பறக்க செய்தன.

குறிப்பாக, இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பந்தய திடலை கடக்கும் பொழுது, கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்து சென்றன. ரேசர்களின் இந்த வெறித்தனமான ஓட்டம் பார்ப்போரை பரவசப்படுத்தின. பந்தயத்தில் வெற்றி பெற்றவர்கள், மேடைக்கு வரவழைக்கப்பட்டு கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தங்களது வாகனங்களில் இருந்து வெற்றியை கொண்டாடிய வெளிப்படுத்திய விதம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…
  • Close menu