ஜெ.,மரணம் குறித்து சந்தேகமா? அறிக்கையை சுயபரிசோதனை செய்து கொள்ளலாம் : நீதியரசர் ஆறுமுகசாமி அதிரடி பேட்டி!!

Author: Udayachandran RadhaKrishnan
19 December 2022, 8:46 pm

கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் மூத்த மறைந்த வழக்கறிஞர் நடன சபாபதியின் திருவுருவப்படம் திறக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நீதியரசர் ஆறுமுகசாமி கலந்து கொண்டார். நீதியரசர் ஆறுமுகசாமி மேடையில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும்போது, அங்குள்ள வழக்கறிஞர்கள் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான அறிக்கை பற்றிய என்னிடம் கேட்டார்கள்.

நீங்கள் சொல்லும் முடிவை எப்படி எடுத்துக் கொள்வது என்றும் கேட்டார்கள். அதற்கு நான் சொல்வது என்னவென்றால். அம்மாவின் வயது 68, உயரம் 5 அடி, எடை 100 கிலோ, சர்க்கரை அளவு 228 மி.கி., பி.பி. 160, கிரியேடின் 0.82, ஒ.பி சிட்டி, சுகர், பிபி இதற்கு சர்ஜரி செய்யலாமா என்பதுதான் முக்கிய விசயம்.

அவரது உடற்பருமன், சர்க்கரை அளவு , ரத்த அழுத்தம் இதற்கு அறுவை சிகிச்சை செய்யலாமா என்பதுதான் பாயிண்ட். இதை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என தெரிவித்தேன்.

லேப்டாப் முன் உட்காருங்கள், இதனை எழுதுங்கள். இதனை கம்ப்யூட்டரில் அடியுங்கள். இதே மாதிரி ஒருவர் உயிருடன் இருப்பது போல ஒரு மருத்துவரை வைத்து உலகில் உள்ள எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள்.

முடிவு எதுவாக இருக்கும் என்று நீங்களே ஆய்வின் அறிக்கையை பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவித்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  • Raghuvaran Fall in love With Famous Actress பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!