அரசுப் பள்ளியில் விஷம் அருந்திய 10ஆம் வகுப்பு மாணவிகளால் அதிர்ச்சி : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!!
Author: Udayachandran RadhaKrishnan20 December 2022, 4:09 pm
பல்லடம் அருகே அரசு பள்ளியில் 10 ம் வகுப்பு மாணவிகள் இருவர் விஷம் அருந்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை எடுத்த காரணம்பேட்டையில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கே சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் பள்ளி செயல்பட்டு வந்தது. அப்பொழுது பள்ளியில் இரு மாணவிகள் மயங்கி கீழே விழுந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் அந்த மாணவிகளை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் அவர்களை சோதனை செய்த பொழுது அவர்கள் தண்ணீரில் எறும்பு மருந்து கலந்து குடித்தது தெரியவந்தது.
இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு சென்ற பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட விசாரணையில் பள்ளியில் படித்து வரும் மாணவி ஒருவர் தனது வீட்டில் பெற்றோர்கள் சண்டையிட்டு கொண்டதால் தனது வாட்டர் பாட்டிலில் தண்ணீரில் எறும்பு மருந்தை கலக்கி பள்ளிக்கு கொண்டு வந்து குடிப்பதற்காக கொண்டு வந்தது தெரிய வந்தது.
மேலும் அந்த மாணவியின் அருகில் அமர்ந்திருந்த மாணவி அந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் அருந்தி உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த விஷப்பாட்டில் கொண்டு வந்த மாணவி பாட்டிலை பிடுங்கி மீதி தண்ணீரை அருந்தி உள்ளார். இதனை அடுத்து இருவரும் மயக்கம் அடைந்தது தெரியவந்தது.
விஷம் அருந்திய இரு மாணவிகளுக்கும் பல்லடம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை கொண்டு வருகின்றனர்.
தாய் தந்தை சண்டையிட்டு கொண்டதற்காக பள்ளி மாணவி பள்ளியில் விஷம் அருந்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.