மலைவாழ் மாணவர்களுக்கான விடுதியில் கஞ்சா… புகார் கொடுத்த 7ஆம் வகுப்பு மாணவனை ஆத்திரம் தீர தாக்கிய சீனியர் மாணவர்கள்!
Author: Udayachandran RadhaKrishnan20 December 2022, 6:41 pm
மலைவாழ் பிரிவை சேர்ந்த மாணவர்களின் உண்டு உறைவிட பள்ளி விடுதியில் கஞ்சா புழக்கம் இருப்பதை போட்டு கொடுத்த ஏழாம் வகுப்பு மாணவனை பத்தாம் வகுப்பு மாணவர்கள் தாக்கிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பாப்பாட்லா மாவட்டத்தில் உள்ள பர்ச்சூரில் மலைவாழ் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கான அரசு உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது.
அங்கு உள்ள ஹாஸ்டலில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தினமும் கஞ்சா அடித்து போதையில் தள்ளாடி வந்தனர். இதனை ஏழாம் வகுப்பு மாணவன் ஒருவன் பள்ளி தலைமை ஆசிரியரிடம் கூறினான்.
தலைமை ஆசிரியர் கஞ்சா போதையில் இருந்த மாணவர்கள் வரவழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தார். இதனால் ஆவேசம் அடைந்த போதை மாணவர்கள் போட்டு கொடுத்த ஏழாம் வகுப்பு மாணவனை கடுமையாக தாக்கி தங்கள் கோபத்தை தீர்த்து கொண்டனர்.
ஏழாம் வகுப்பு மாணவனை தாக்கிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.