ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்? பாஜக எம்பி பரபரப்பு பதில்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 December 2022, 7:25 pm

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை எம்பி சுஷில் மோடி , ஓரினச்சேர்க்கை திருமணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று கூறினார்.

மேலும், இடதுசாரிகள் சிலர் நாட்டின் நெறிமுறைகளை மாற்ற முயற்சிக்கின்றனர் என்றும் குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்ற வளாகத்தில் வெளியே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, ஓரினச்சேர்க்கை திருமணங்களை ஏற்க இந்திய சமூகம் தயாராக இல்லை என்றும் அது இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு பொருத்தமற்றது என்றார்.

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு ஓரினச்சேர்க்கை திருமணம் பொருத்தமற்றது. ஆனால் சில இடதுசாரிகள் மற்றும் ஆர்வலர்கள் சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்று ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
இரண்டு நீதிபதிகள் சுப்ரீம் கோர்ட்டில் அமர்ந்து இது குறித்து முடிவெடுப்பது சரியாக இருக்காது என்று தெரிவித்தார். ஓரினச்சேர்க்கை திருமணங்களை சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது.

இது முதலில் நாடாளுமன்றத்திலும், மக்கள் மத்தியிலும் விவாதிக்கப்பட வேண்டும். எந்த மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து பெண்களின் திருமண வயதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றார்.

இந்தியாவில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக் கோரிய இரண்டு மனுக்களுக்கு பதிலளிக்க 2023 ஜனவரி 6 ஆம் தேதி வரை அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடைசியாக அவகாசம் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 737

    0

    0