முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை ஊழல் பட்டியல், சொத்து பட்டியல் தயார் : மீண்டும் பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை!!

Author: Udayachandran RadhaKrishnan
20 December 2022, 7:47 pm

திருப்பூர் கோவில் வழி பகுதியில் பாஜக வீரபாண்டி மண்டலம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது இதில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தமிழகத்தில் திமுகவின் 18 மாத ஆட்சியை மக்கள் பார்த்து மனமாற்றம் அடைந்து இருப்பதாக பேசிய அவர் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார் .

அப்போது பேசிய அவர் காங்கிரஸ் கட்சியினரின் பேச்சுக்கள் அவதூறாக மாறி வருவதாகவும் இருப்பினும் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுப்பிய கேள்விக்கு நிச்சயம் பாரதிய ஜனதா கட்சி அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள் எனவும் தெரிவித்தார் .

மேலும் ராகுல் காந்தி மேற்கொண்ட நடை பயணம் என்பது வாக்கிங் எக்சர்சைஸ் எனவும் அது ஜோடோ யாத்திரை அல்ல தோடா யாத்திரை இந்தியாவை பிளவுபடுத்தும் யாத்திரை எனவும் , ராகுல் நடை பயணத்தின் வெற்றி குஜராத் தேர்தலிலேயே தெரிந்தது ஒரு தொகுதியில் கூட காங்கிரசால் முழுமையான வெற்றியை பெற முடியவில்லை எனவும் தெரிவித்தார் .

ஆனால் பாரதிய ஜனதா மேற்கொள்ள இருக்கின்ற நடைபயணம் என்பது தமிழ்நாடு முழுவதும் சாமானிய மக்களை சந்தித்து அவர்களுடன் தங்கி அவர்களது பிரச்சனைகளை கேட்டு அறிந்து 1 வருட காலம் அவர்களுடனே ஒன்றினைய மேற்கொள்ளப்படும் நடைபயணம் எனவும் தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பில் மட்டுமல்ல எனது முழு வரவு செலவு கணக்கையும் ஏப்ரல் மாதத்தில் தாக்கல் செய்கிறேன். அடுத்த மாதத்தில் ஒரு இணையதளம் தொடங்கி திமுக எம்எல்ஏ துவங்கி அமைச்சர் வரையிலான ஊழல் பட்டியலில் வெளியிட இருக்கிறோம்.

இலவச தொடர்பு எண்ணை அறிமுகம் செய்து அந்தந்த பகுதியில் திமுக பினாமிகள் சேர்த்து வைத்த சொத்து பட்டியலையும் பொதுமக்களாகவே தெரிவிக்கும் வகையிலான ஏற்பாடுகளை செய்ய இருக்கிறோம்.

சாமானிய மக்களை பார்த்து ஆட்சியில் இருப்பவர்கள் கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல் எம்ஜிஆரை கேள்வி கேட்டு இருக்கிறார்கள் இன்று என்னை கேட்கிறார்கள்.

முதலமைச்சரின் குடும்பம் மற்றும் 13 அமைச்சர்களின் பட்டியலை தயார் செய்துள்ளோம். இதில் 2 லட்சம் கோடி ஊழல் வெளிவந்துள்ளது.

திமுக தொட்டுவிட்டார்கள் முடிவுரை பாஜக எழுத இருக்கிறது. 2ஜி ஊழலால் திமுக மற்றும் காங்கிரசுக்கு முடிவுரை எழுதப்பட்டதோ, அதேபோல் நாங்கள் கேட்கும் கேள்வி திமுகவிற்கு முடிவுரை எழுதும் எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அண்ணாமலை வழங்கினார்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 832

    0

    0