ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்.. புகார் அளித்த 60 நிமிடங்களில் காத்திருந்த அதிர்ச்சி : திண்டுக்கல் அருகே பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
20 December 2022, 9:29 pm

நத்தத்தில் ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய நபர்களை ஒரு மணி நேரத்தில் மடக்கிக் கொடுத்த நத்தம் போலீசார்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சமுத்திரப்பட்டியை சேர்ந்த அழகப்பன் ரியல் எஸ்டேட் தொழில் ஈடுபட்டு வருகிறார். இவர் கமுதியை சேர்ந்த எனர்ஜி என்ற நிறுவனத்திற்கு 96 ஏக்கர் நிலம் ஒரு கோடி ஐந்து லட்ச ரூபாய்க்கு பேசி முடித்ததாக கூறப்படுகிறது.

இதில் முதல் தவணையாக 56 ஏக்கர் மட்டும் பத்திர பதிவு செய்துள்ளனர். மீதி உள்ள இடத்திற்கு பத்திரப்பதிவு செய்வதில் காலதாமதமும் அலைக்கழிப்பு ஈடுபட்டு வந்துள்ளார்.

ஆத்திரமடைந்த நிறுவனத்தின் சேர்ந்தவர்கள் கண்ணன், முத்தையா, வீரப்பன், மருது, நால்வரும் சேர்ந்து அழகப்பனை நத்தத்தில் இருந்து திண்டுக்கலுக்கு காரில் கடத்தி சென்றுள்ளனர்.

அழகப்பன் உறவினர் ராஜா நத்தம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பெயரில் நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி தலைமையில் விசாரணையில் துரிதப்படுத்தி காரை சாணார்பட்டி காவல் நிலையம் அருகே தலைமை காவலர்கள் கிருபாகரன் கணேசன் ஆகியோர் மடக்கிப்பிடித்தனர்.

இதிலிருந்த அழகப்பனை மீட்டு கடத்திய நபர்களை கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…