பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியது நல்ல காமெடி.. ஓபிஎஸ்-க்கு ஜனவரி 4ம் தேதி தான் அதிர்ச்சி இருக்கு ; முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்!!

Author: Babu Lakshmanan
21 December 2022, 5:57 pm

விருதுநகர் ; நீதிமன்றம் மூலம் ஒபிஎஸ் அணிக்கு சாதகமான தீர்ப்பு வரும் என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியது நகைச்சுவையாக தான் பார்க்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயில்பட்டியில் அதிமுக சார்பில் பால் விலை உயர்வு மின் கட்டண உயர்வு சொத்து வரி உயர்வு ஆகியவைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கலந்து கொண்டார்.இந்த ஆர்பாட்டத்தின் போது திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் பேசியதாவது :- அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்று முடிந்து 6 மாதம் கழித்து 200 பேருக்கு பொறுப்புகள் போட்டு அவர்களை வைத்து ஒபிஎஸ் ஒரு நிகழ்ச்சி என்று நடத்த முயற்சி செய்கிறார்கள். மேலும் ஒபிஎஸ் தலைமையில் இன்று நடைபெறும் கூட்டத்திற்கு எந்தவித அங்கீகாரம் மற்றும் சட்ட ரீதியான மற்றும் அரசியல் ரீதியான அங்கீகாரம் பெறாத நிகழ்ச்சி.

எந்த விதத்திலும் ஒபிஎஸ் தலைமையில் நடைபெறும் கூட்டத்தால் சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் அதிமுகவுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது.

திமுகவில் உதயநிதி பின்னாடி அவரின் மகன் இன்ப நிதி வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என கே.என்.நேரு பேசி இருப்பது வாரிசு அரசியலின் உச்சக்கட்டம். அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது.

வாரிசு இருக்கு அதனால் வாரிசு அரசியல் இருக்கு என தமிழக முதல்வர் பேசியது மூலம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு குழந்தை இல்லை என்பது குறிப்பிடுகிறார்.ஆனால் ஜெயலலிதாவுக்கு அதிமுகவில் உள்ள ஒவ்வொரு தொண்டனும் குழந்தைகளே. இப்படி பேசியது மூலம் திமுக விடியலை நோக்கி செல்லவில்லை. அழிவை நோக்கி செல்கிறது.

பாஜக தலைவர் அண்ணாமலையின் வாட்ச் பற்றி பேசுபவர்கள் முதல்வரின் மருமகன் சபரீசன் 5 கோடிக்கு வாட்ச் கட்டுகிறார்.மேலும், அண்ணாமலை கட்சியின் தலைவர், ஆனால் முதல்வரின் மருமகன் கட்சியில் என்ன பொறுப்பில் உள்ளார்..? தனி நபர் விமர்சனம் என்பது தப்பாக போய்விடும். திமுக பொறுத்தவரை தனிநபர் ஒழுக்கம் இருக்காது. அண்ணாமலையை பற்றி குறை சொல்வதற்கு எந்த வித தகுதியும் இல்லை.

அண்ணாமலையை பற்றி அமைச்சர் செந்தில்பாலாஜி பேச எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது. மேலும், செந்தில்பாலாஜி மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. அதில் சட்ட ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நெய்வேலி NLCயில் இடம் கையகப்படுத்துவதில் மத்திய அரசாங்கம் இந்த தவறை செய்கிறது. ஆனால், இந்த நில எடுப்பு என்பது மாநில அரசு மூலம் நடைபெறுகிறது. இதன் அடிப்படையில் தான் பாஜகவும், திமுகவும் கூட்டணியாக செயல்படுகிறார்களா..? என சிவி சண்முகம் கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இயங்கும் அதிமுக தனித்து இயங்கி வெற்றி பெற கூடியது. தமிழகத்தில் அதிமுகவை தவிர யாரும் வலிமையாக கட்சி கிடையாது. தனியாக நின்று ஜெயிக்க முடியும். யாரையும் தூக்கி சுமக்க வேண்டிய அவசியம் இல்லை என சிவி சண்முகம் பேசினார். நாடாளுமன்ற தேர்தலை பொருத்த வரையில் சீட்கள் கொடுக்க வேண்டிய இடத்தில் இருப்பது அதிமுக.

அதிமுகவின் சிவி சண்முகத்தை மூன்றாம் கட்ட தலைவர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். எந்த உறவுகள் எந்த நேரத்தில் ஏற்படுத்த வேண்டுமோ, அதை எடப்பாடி பழனிச்சாமி சரியான நேரத்தில் ஏற்படுத்துவார். நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரையில் தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ அதிமுக வெற்றி பெறும்.

வரும் நாடாளுமன்ற தேர்தல் என்பது எடப்பாடி பழனிச்சாமிக்கு பலப்பரிட்சை அல்ல. நாடாளுமன்ற தேர்தல் என்பது பல வெளிப்பாடாக இருக்கும். எங்களுடைய பலத்தை வெளிப்படுத்தக்கூடிய தேர்தலாக நாடாளுமன்ற தேர்தல் இருக்கும்.

பாஜக தலைவர் அண்ணாமலை அவருடைய கட்சியை வலுப்படுத்த நடைபயணம் மேற்கொள்கிறார். மேலும், பாஜகவை இன்னும் தோழமை கட்சியாகத் தான் பார்க்கிறோம். அதிமுகவை அழித்து மற்ற கட்சிகள் வளருவார்கள் என நாங்கள் நம்பவில்லை.அதிமுகவில் உள்ள 99 சதவீதம் தொண்டர்களை நாங்கள் ஒருங்கிணைத்து இருக்கிறோம். ஜனவரி 4ம் தேதிக்கு பின்னர் சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்கும். நீதிமன்றம் மூலம் ஒபிஎஸ் அணிக்கு சாதகமான தீர்ப்பு வரும் என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியது நகைச்சுவையாக தான் பார்க்க வேண்டும், என்றார்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 419

    0

    0