‘போட்டோ எடுக்காதே… எனக்கு பிடிக்காது’… புகைப்படம் எடுக்க முயன்றவரை ஆவேசமாக துரத்திய குட்டி யானை ; வைரலாகும் வீடியோ!!
Author: Babu Lakshmanan22 December 2022, 11:05 am
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் புகைப்படம் எடுக்க சென்ற நபரைகுட்டி யானை துரத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்கு உட்பட நெல்லியன்பதி வனப் பகுதியில் ஏராளமான வன விலங்குகளின் இருப்பிடமாக இருந்து வருகிறது. சாலை வழியாக 6 மாதமான குட்டி யானையும், தாய் யானையும் வலம் வந்து கொண்டு இருந்தது.
அப்போது, சுற்றுலா பயணி ஒருவர் புகைப்படம் எடுப்பதற்கு குட்டி யானையிடம் நெருங்கி உள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த குட்டி யானை புகைப்படம் எடுக்க முயன்ற நபரை சாலையில் துரத்தி சென்று உள்ளது. இந்த காட்சிகளானது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மேலும், வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் நடந்து கொள்ளக் கூடாது என்றும், இது போன்று நடப்பதை வனத்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.