தனி தீவில் அந்த வாரிசு நடிகருடன் இருக்க ஆசை – நடிகை ஜனனி ஓபன் டாக்..!
Author: Vignesh22 December 2022, 4:45 pm
ஜனனி ஐயர் ஓரு தமிழ் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் அல்லாது மலையாள படங்களிலும் நடித்துள்ளார் . இவர் நடிகை ஆவதற்கு முன்பு நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளார் . இவர் தமிழில் முதல் முதலில்
” திரு திரு துரு துரு ” படத்தில் சிறப்பு தோற்றத்தில் அறிமுகமானார் . அதன் பின் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய சிம்பு மற்றும் திரிஷா நடித்த ” விண்ணைத்தாண்டி வருவாயா ” படத்தில் கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார் .
தேசிய விருது பெட்ரா இயக்குனர் பாலா இயக்கத்தில் “அவன் இவன்”
படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார் ஜனனி ஐயர். அவன் இவன் திரைப்படம் அவருக்கு முதல் திரைப்படமாக இருந்தாலும் தனது நடிப்புத் திறமையால் தனக்கென தனி அங்கீகாரத்தை பெற்றார் நடிகை ஜனனி.
அவன் இவன் திரைப்படத்தை தொடர்ந்து பாகன், தெகிடி, அதே கண்கள், பலூன் மற்றும் விதி மதி உல்டா போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் நடித்த படங்களில் தெகிடி படத்தை தவிர எதுவும் ஓடவில்லை இதனால் மார்க்கெட் குறைந்துவிட்டது .அப்படி குறைத்த மார்க்கெட்டை திரும்ப கொண்டுவர இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்சியில் கலந்து கொண்டார்.
அதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்டார் நடிகை ஜனனி . இவர் நினைத்தவாறே பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் இவருக்கு வாய்ப்புகள் வரத்துடங்கினஇவரின் புதிய படத்தை இயக்குனர் சந்தீப் என்பவர் இயக்குவதாகவும் த்ரில்லர் கதை என்றும், இந்த படத்தில் கதாநாயனாக அசோக் செல்வன் நடிக்க விருப்பதாகவும் தகவல் வந்தது. அசோக் செல்வன் மற்றும் ஜனனி ஏற்கனவே தெகிடி திரைப்படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவாவுடன் பஹூரா என்னும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜனனி. படங்களில் பிஸி ஆகா நடித்து கொண்டிருக்கும் இருக்கும் ஜனனி அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகபடுத்திக்கொண்டிருப்பார் .
சமீபத்தில் நடிகை ஜனனியிடம், தனி தீவில் சிக்கிக் கொண்டால் யாருடன் இருக்க ஆசைபடுவீர்கள் என கேள்வி கேட்கப்பட்டதற்கு, பதில் அளித்த அவர், ” என் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்க துருவ் விக்ரம் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.