‘அமைச்சர் வேணாம்.. முதலமைச்சராகனும்’ ; உதயநிதிக்காக சபரிமலையில் பேனர் வைத்து வழிபாடு நடத்திய திமுக தொண்டர்கள்…!!
Author: Babu Lakshmanan23 December 2022, 1:43 pm
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டி மதுரை மாநகர் திமுகவினர் சபரிமலையில் வழிபாடு நடத்தினர்.
தமிழகத்தின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் கடந்த டிசம்பர் 14ம் தேதி பொறுப்பேற்று கொண்டார். அவர் துணை முதல்வர் பொறுப்புக்கு தகுதியானவர் என்றும், எனவே, அவரை துணை முதல்வர் பொறுப்பு வழங்க வேண்டி திமுகவில் குரல் எழுந்தது வருகிறது.
இந்நிலையில், மதுரை மாநகர் திமுகவைச் சேர்ந்த சக்தி விநாயகர் கணேசன் என்பவர் உதயநிதி ஸாலின் தமிழக முதல்வதாக வேண்டி சபரிமலை யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
சபரி மலையில் “தமிழக முதல்வராக வேண்டி சபரிமலை யாத்திரை” என்ற பேனர் பிடித்தப்படி புகைப்பட எடுத்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.