உங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாகவே இருக்க விரும்புறேன்… திமுகவுக்கு மட்டுமே வரலாறு உண்டு ; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!!

Author: Babu Lakshmanan
24 December 2022, 10:12 am

திண்டுக்கல் : திமுகவுக்கு மட்டுமே வரலாறு இருப்பதாகவும், வேறு எந்த கட்சிக்கும் வரலாறு கிடையாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா பைபாஸ் அருகில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் திமுக கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது. இதில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, கழக மூத்த முன்னோடிகள் 7 ஆயிரம் பேருக்கு பொற்கிழி வழங்குகினார்.

விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது :- திண்டுக்கல் மாவட்டத்திற்கு பல முறை வந்து உள்ளேன். அமைச்சராக பொறுப்பேற்று முதல் முறையாக உங்களை சந்திக்க வந்துள்ளேன். திண்டுக்கல் திமுக கோட்டை. அதற்கு காரணம் ஐ.பெரியசாமி தான். அவர் கலைஞரோடு பயணித்தவர். ஒரு கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துகாட்டாக திமுக உள்ளது.

திமுகவிற்கு தான் வரலாறு உள்ளது. மற்ற கட்சிகளுக்கு வரலாறு கிடையாது. திமுகவை குறைசொல்வது தான் அதிமுகவின் வரலாறு. திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் அதிக இடங்களில் நடத்தி உள்ளோம். அதிமுக சந்தர்பவாதம் கொண்ட கட்சி. ஓபிஎஸ் – ஈபிஎஸ் இருவரும் முதல்வர், துணை முதல்வர் என பங்களிப்போடு இருந்தவர்கள். தற்போது இருவரும் அடித்து கொள்கின்றனர்.

தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளை தொடர்ந்து முதல்வர் நிறைவேற்றி வருகிறார், நேற்று கூட பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. நான் உங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாகவே இருக்க விரும்புகிறேன். தற்போது அமைச்சராக உள்ளதால் கூடுதல் பொறுப்புடன் இருக்க வேண்டும், என உதயநிதி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐபி செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் காந்தி ராஜன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்