‘அந்த கண்ணாடி கலர் மட்டும்… பொங்கல் பண்டிகைக்குள் தயார் ஆகனும்’ ; பேராசிரியர் அன்பழகனின் சிலையை ஆய்வு செய்த CM ஸ்டாலின்!

Author: Babu Lakshmanan
24 December 2022, 10:52 am

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே பேராசிரியர் அன்பழகனின் வெண்கல திருவுருவச் சிலை அமைக்கும் பணியினை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மறைந்த திமுக முன்னாள் பொதுச் செயலாளர் க. அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி, அவரது திருவுருவ வெண்கல சிலையை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் அமைப்பதற்காக, திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே புதுப்பேடு கிராமத்தில் எஸ்பி பிள்ளை சிற்பக்கலை கூடத்தில் 8 1/2 அடி உயர சிலை தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் எவ வேலு, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகர், கோவிந்தராஜன், பொன்னேரி நகராட்சி தலைவர் Dr.பரிமளம் விஸ்வநாதன் ஆகியோருடன் பேராசிரியர் முழு திருவுருவச் சிலையை செய்வதற்கான மாதிரி களிமண் சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், சிலையில் சில மாற்றங்கள் செய்து விரைந்து வெண்கல சிலையை முடிக்குமாறு, சிற்பக்கூட சிற்பி தீனதயாளன் குழுவினரிடம் அறிவுறுத்தினர். முதலமைச்சர் வருகையையொட்டி, ஆவடி காவல் ஆணையர் சந்திப்ராய் ரத்தோர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தனர். செங்குன்றம் துவங்கி மீஞ்சூர் புதுப்பேடு வரை மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சிலையை நேரில் பார்வையிட்ட பின்னர் க. அன்பழகன் வெண்கல திருவுருவச் சிலையில் கருப்பு வண்ண கண்ணாடி பிரேமிற்கு பதில் பிரவுன்(காபி) நிறத்திலேயே கண்ணாடி அமைக்க அறிவுறுத்தினார். மேலும், தைத்திருநாள் வருவதற்குள் பணிகளை முடிக்குமாறு சிற்பி தீனதயாளன் குழுவினரிடம் தெரிவித்தார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 455

    0

    0