என்ன லவ் பண்ணி ஏமாத்திட்டான்.. ஆனா இப்ப அவன் பீல் பண்ணுவான் : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி!!
Author: Udayachandran RadhaKrishnan24 December 2022, 4:15 pm
இப்போது இருக்கும் சினிமா உலகில் எத்தனையோ நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் இந்த காலத்தில் இருக்கும் நடிகைகள் மட்டும் இல்லாமல் அந்த காலத்தில் இருந்த நடிகைகளுமே சரி அனைவருமே காதலித்து தான் கல்யாணம் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது காதலித்து திருமணம் ஆகாத நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆனால் நமது தமிழ் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னரே பல தருனத்தை தாண்டி வந்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகை என்பதை தாண்டி சினிமா குடும்பத்தில் இருந்த வந்த ஒரு நடிகையும் ஆவார், தந்தை ராஜேஷ் ஒரு தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அம்மா ஒரு பிரபலமான நடன கலைஞர் ஆவார் அவரது பெயர் நாகமணி ஆகும். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய ஆரம்ப கட்ட வாழ்க்கையில் இருந்து இப்போது வரை சென்னையில் தான் இருக்கிறார்.
ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு சாதரணமான குடும்பத்தில் இருந்த வந்த ஒருவர் என்பர் அனைவரையும் நம்ப வைத்தார்.
1996 ஆம் ஆண்டில், தெலுங்கில் ராம்பண்டு திரைப்படத்தில் குழந்தையாக நடித்தார். எப்போதுமே தமிழ் நடிகைகளை பொறுத்தவரை சென்னையில் உள்ள பிரபலமான கல்லூரி லயோலோ மற்றும் எத்திராஜ் என்று பிரபலமான கல்லூரியில் தான் படித்துள்ளார்கள், அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் படித்து B.Com பட்டம் பெற்றார்.
மாணவர்களின் கலாச்சார விழாவிற்கான மேடை நிகழ்ச்சிக்கு நடனம் ஆட வேண்டியிருந்ததால் நடனம் கற்கத் தொடங்கினார், பின்னர் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட ரியாலிட்டி ஷோவில் நுழைந்தார். அவர் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் வெற்றி பெற்றார், அதன்பிறகு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தாத்தா அமர்நாத்தும் ஒரு பிரபலமான நடிகர் ஆவார். அவரது அத்தை ஸ்ரீ லட்சுமி, 500 படங்களுக்கு மேல் தெலுங்கு நகைச்சுவை நடிகராக உள்ளார்.
அவர் நான்கு உடன்பிறப்புகளில் இளையவர், அவர்களில் இரண்டு மூத்த சகோதரர்கள், சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கூறியது, நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் சென்னை மார்கெட்டில் பல வேலை பார்த்து தான் எனது பசியை போக்கி வந்தேன் என்று கூறியுள்ளார்.
ஆனால் தன் சிறுவயதில் நினைத்த ஆசை எல்லாம் நடக்காமல் போனது. இதனால் தான் இப்போது தன் ஆசைகளை எல்லாம் பூர்த்தி செய்து வருகிறாராம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஆனால் சினிமாவுக்கு வந்த போது ஒரு இயக்குனர் ஐஸ்வர்யா ராஜேஷை பார்த்து உன்னை ஹீரோயினாக நடிக்க வைக்க முடியாது வேணும் என்றால் துணை நடிகையாக நடிக்க வைக்கலாம் என்று கூறியுள்ளார்.
ஆனால் அதே இயக்குனர் படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தன் காதலை பற்றி கூறுகையில் நான் 11ஆம் வகுப்பு படிக்கும் போது ஒருவரை உண்மையாக காதலித்தேன், ஆனால் அவர் என்னை காதலிக்கவில்லை. கண்டிப்பாக அவர் தற்போது பீல் செய்வர் “என்று சிரித்தபடியே கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஆனால் என்னுடைய கல்லூரி காலத்தில் இருந்தே மாடலிங் செய்து வந்தேன், இதன் பின்னர் தான் என்னுடைய கல்லூரி காலத்தில் இருந்தே எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்து வந்தேன்.
அப்போது ஒருவரை காதலித்தேன், இந்த இரண்டு நபருக்கு பிறகு நான் யாரையும் காதலிக்கவில்லை. ஆனால் எனது மூன்றாவது காதல் தான் கடைசியாக இருக்கும் அதுவே நிரந்தரமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன், என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.