வனச்சாலையோரங்களில் அதிகரித்த வனவிலங்குகள் நடமாட்டம் ; காட்டு யானை தாக்கியதில் பைக்கில் சென்றவர் உயிரிழப்பு..!!!

Author: Babu Lakshmanan
26 December 2022, 3:57 pm

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே உள்ள ஏலஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் கடம்பூரில் இருந்து குன்றி வனச்சாலை வழியாக தனது நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கடம்பூர் வனச்சரத்திற்குட்பட்ட மாமரத்து பள்ளம் அருகே சென்று கொண்டிருந்தபோது, புதர் மறைவில் இருந்து வந்த காட்டு யானை ஒன்று திடீரென இருசக்கர வாகனத்தை மறித்து இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த பழனிச்சாமியை தாக்கியுள்ளது. இதில், படுகாயம் அடைந்த பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடம்பூர் வனத்துறையினர் பழனிச்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!