அந்த தைரியம் அஜித்துக்கு மட்டும் தான் இருக்கு.. வேற யாருக்கும் இல்லை : வாரிசு பட நடிகர் ஓபன் டாக்!!

Author: Vignesh
27 December 2022, 8:15 pm

தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.

இப்படத்தில் பிரபு, பிரகாஷ் ராஜ், சங்கீதா, சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் என ஒரு பிரபல நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் நிலையில், இப்படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் விஜய்.

வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் வந்த இளம் நடிகர்கள் பலர் இப்போதும் பயணம் செய்கிறார். சில நடிகர்கள் வந்த வேகத்தில் சினிமாவை விட்டு காணாமல் போய்விட்டனர்.

அப்படி வந்த ஒரு சிறந்த நடிகர் தான் ஷ்யாம், நல்ல தரமான நடிகர் ஆனால் அவரது உழைப்பிற்கு ஏற்ற வெற்றிப்படம் இப்போது வரை அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தற்போது நடிகர் ஷ்யாம், விஜய்யுடன் வாரிசு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூட நிறைய விஷயங்களை பேசியிருந்தார்.

shaam - updatenews360

அண்மையில் ஷ்யாம் கொடுத்த ஒரு பேட்டியில், எல்லா மொழி நடிகர்களும் என்னிடம் கூறியுள்ளார், உங்களின் சினிமா துறையில் அஜித் இருக்கிறாரே அவருக்கு மிகப்பெரிய தைரியம் உள்ளது, தன்னம்பிக்கை உள்ளது.

ajith - updatenews360 3

அவருக்கு இருக்கும் தைரியம் போல் யாருக்கும் இல்லை, எல்லோரும் வெள்ளை முடி தெரிந்தால் கலர் அடிக்கும் நிலையில் அவர் நான் இதுதான் இப்படியே என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என இருக்கிறார். அதுதான் அஜித் என கூறியதாக ஷ்யாம் தெரிவித்திருக்கிறார்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 1093

    3

    1