எங்களுக்காக இப்படி எல்லாம் பண்ணாதீங்க… ரசிகைக்கு அட்வைஸ் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!!

Author: Vignesh
28 December 2022, 11:12 am

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ரஜினி. முதலில் ரஜினிகாந்த் பேருந்து நடத்துநராக இருந்தது அனைவரும் அறிந்ததே..

‘பீஸ்ட்’ படத்தின் இயக்குனர், நெல்சன் திலீப் குமார் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை, சன் பிச்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

jailer - updatenews360

கிட்ட தட்ட 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில், விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த பட்ட படப்பிடிப்பில் தமன்னா, ரம்யா கிருஷ்ணா போன்றவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

jailer - updatenews360

இந்நிலையில், பெண் ஒருவர் கையில் டாட்டு போட்டதை பார்த்த ரஜினிகாந்த் பணம் வாங்கிட்டு படத்தில் நடிக்கிற ஆர்டிஸ்ட் நாங்க. எங்களுக்காக இதையெல்லாம் பண்ணாதம்மா என ரஜினிகாந்த் ரசிகைக்கு அறிவுரை கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!