பாஜக பிரமுகர் வீட்டில் புகுந்த மர்மநபர்கள்… 50 சவரன் நகைகள் மாயம் : போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
28 December 2022, 6:31 pm

பாஜகவின் மாநில ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினராக ரவி என்பவர் இருந்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை அருகில் வசித்து வருகிறார்.

நிலையில் எண்ணாயிரம் கிராமத்தில் அரசு மருத்துவமனையில் கண் மருத்துவராக பணி புரியும் மனைவி வளர்மதியை காலையில் பணிக்கு அழைத்து சென்று விட்டு மீண்டும் மதிய உணவிற்காக நண்பகலில் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பின்பக்க கதவுகள் உடைத்திருந்தது தெரியவந்தது.

அதிர்ச்சி அடைந்த ரவி மற்றும் அவரது மனைவி வளர்மதி அறை உள்ளே சென்று பார்த்தபோது பீரோவின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து கொள்ளை சம்பவம் குறித்து ரவி விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததின் பேரில் விரைந்து வந்த போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கபட்டு தடயங்களை சேகரித்தனர்.

மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்று மோப்பநாய் நின்று விட்டது. அந்தப் பகுதியில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் முண்டியம்பாக்கத்தில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 419

    0

    0