எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் வழங்கிய மத்திய அரசு : ஒரே ஒரு கடிதம்.. ஒட்டுமொத்த அதிமுகவினரும் மகிழ்ச்சி!!!

Author: Udayachandran RadhaKrishnan
28 December 2022, 8:10 pm

எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்து மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது அதிமுகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் என்பது நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய சட்டத்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்து வருகிறது.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எல்லாம் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். அந்த அடிப்படையில் அனைத்து கட்சிகளிடமும் ஆலோசனை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அதிமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கிய விஷயமாக அதிமுகவினுடைய பொதுச் செயலாளர் என்ற முறையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு இந்த கடிதமானது அனுப்பப்பட்டுள்ளது.

அதிமுகவின் பொது செயலாளர் என்ற முறையில் ஈபிஎஸ் அவர்களுக்கு கடிதம் ஆனது அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய சட்டத்துறை அமைச்சகம் ஈபிஎஸ் அவர்களை அதிமுகவினுடைய பொதுச் செயலாளராக அங்கீகரித்ததாக இதை கருத வேண்டி இருக்கிறது.

அதிமுகவினுடைய பொதுச் செயலாளர் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது தான் இதில் மிக முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அதிமுகவில் யார் தலைமை என்ற விவகாரம் இன்னமும் நீடித்து வரும் நிலையில் மத்திய சட்டத்துறை அமைச்சகம் இபிஎஸ் அவர்களை அதிமுகவினுடைய பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு கடிதம் அனுப்பியது மிக முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது..

சமீபத்தில் அதிமுகவினுடைய தேர்தல் செலவினங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது. ஓபிஎஸ் ஒருபுறம் தான் தான் அதிமுகவின் தலைமை என்று இன்னும் கூறி வரக்கூடிய நிலையில் மத்திய சட்டத்துறை அமைச்சகத்தினுடைய அங்கீகாரம் என்பது எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்துள்ளது மிக ஒரு முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

  • Ajith Vidamuyarchi Trailer Release Update விடாமுயற்சி ட்ரைலர் ரெடி : அப்போ ரிலீஸ் தேதி…இருங்க பாய்..நாளைக்கு ஒரு வெயிட்டான சம்பவம் இருக்கு..!