தென்னிந்திய சினிமாவை அவமானப்படுத்திய விஜய் பட நடிகை..! வறுத்தெடுத்த ரசிகர்கள்..! ஏத்தி விட்ட ஏணியை மறக்கலாமா..?

Author: Vignesh
29 December 2022, 10:25 am

நடிகை ராஷ்மிகா நேஷ்னல் கிரஷ் என சொல்லும் அளவுக்கு ஹீரோயினாக மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கிறார். தற்போது தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி ஹிந்தியிலும் தற்போது நடித்து வருகிறார்.

அவர் அடுத்து வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருக்கும் நிலையில், சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகியுள்ள மிஷன் மஞ்சு படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார்.

இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ராஷ்மிகா, பாலிவுட் மற்றும் தென்னிந்திய பாடல்கள் குறித்து பேசினார்.

rashmika mandanna -updatenews360

இதில் ‘தென்னிந்திய சினிமாவில் ஐட்டம் பாடல்களும், குத்து பாடல்களும் மட்டுமே பிரபலமாக இருக்கிறது. ஆனால், பாலிவுட்டில் தான் நல்ல ரொமான்டிக் பாடல்கள் உள்ளது என தெரிவித்துள்ளார்.

ராஷ்மிகா இப்படி பேசியுள்ளது தென்னிந்திய சினிமா ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தென்னிந்திய சினிமாவை அவமானப்படுத்தும் வகையில் எப்படி பேசலாம் என்று ராஷ்மிகாவை ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகிறார்கள்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்