விஜய் ஒரு ‘ஆம்பள ஷகீலா’ – பிரபல பத்திரிகையாளரின் பேட்டியால் பொங்கி எழும் தளபதி ரசிகர்கள்..!

Author: Vignesh
29 December 2022, 1:00 pm

தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.

இப்படத்தில் பிரபு, பிரகாஷ் ராஜ், சங்கீதா, சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் என ஒரு பிரபல நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் நிலையில், இப்படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் விஜய்.

வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விஸ்வாசம் படத்தில் எப்படி அப்பா, மகள் செண்டிமெண்ட் இருந்ததோ அதே போல் விஜயின் வாரிசு படத்தின் கிளைமாக்ஸில் அப்பா சரத்குமாருக்கும், மகன் விஜய்க்குமான செண்டிமெண்ட் காட்சி இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி அளித்த பேட்டியில், விஜய்யின் திரைப்படங்களுக்கு கூட்டம் கூட்டமாய் தற்போது குடும்ப ரசிகர்கள் வருகிறார்கள்.

shakeela-Updatenews360-2

ஆனால், ஒரு காலகட்டத்தில் குடும்ப ரசிகர்கள் விஜய் படத்திற்கு வர தயங்கியதாகவும், ஏனென்றால் படத்தில் எல்லைமீறி பல காட்சிகளில் விஜய் நடித்ததாகவும், ரொமான்ஸ் என்ற பெயரில் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள், மற்றும் காதலியின் அம்மாவிற்கு சோப் போட்டு விடும் காட்சியில் கூட விஜய் நடித்ததால், விஜய்யுடைய படங்களுக்கு வரவே குடும்ப ரசிகர்கள் யோசித்ததாக தெரிவித்தார்.

மேலும், கூறிய பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி, ஒரு முறை பத்திரிகையில் நடிகர் விஜய் தான் ஆம்பள ஷகீலா என்று எழுதப்பட்டதாக தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?