உடல்நலக்குறைவு காரணமாக பிரதமரின் தாயார் காலமானார் : அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
30 December 2022, 8:42 am

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பிரதமர் மோடியின் தாயார் இன்று அதிகாலை சிகிச்சை பலனிறி உயிரிழ்நதார். அவருக்கு வயது 100.

தாயார் மறைவையடுத்து பிரதமர் மோடி அவசர அவசரமாக அகமதாபாத் புறப்பட்டு சென்றுள்ளார். ஏற்கனவே திட்டமிட்டு இருந்த நிகழ்ச்சிகளில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்பார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அனுராக் தாகூர், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பல இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!