சாலை விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்.. தடுப்பில் மோதி தீ பிடித்த கார் : அதிர்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 December 2022, 10:10 am

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் சாலையின் நடுவே உள்ள டிவைடரில் மோதி தீப்பிடித்தது.

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த போது அவரது கார் சாலையின் நடுவே உள்ள டிவைடரில் மோதி தீப்பிடித்தது.

இந்த விபத்தில் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார். பண்ட் காரை ஓட்டிச் சென்றதாகவும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூர்க்கி அருகே விபத்து நடந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் அவரின் நெற்றி மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீஸ் சூப்பிரண்டு தேஹத் ஸ்வப்னா கிஷோர் சிங் சம்பவ இடத்துக்கு வந்தார்.

சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றிய இந்திய அணியில் பண்ட் இடம்பெற்றிருந்தார்.

அவர் 46 மற்றும் 93 ரன்களை அடித்திருந்தார். இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • gautham karthik shortened his name as grk தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?