2022-ன் கடைசி நாளில் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை… மீண்டும் புதிய உச்சத்தை அடைந்து விற்பனை!!
Author: Babu Lakshmanan31 December 2022, 11:10 am
2022ம் ஆண்டின் இறுதியில் தங்கத்தின் விலை உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்து விற்பனையாகி வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சத்தை தொட்டும் விற்பனையாகி, ஆபரண பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
கடந்த ஜூலை மாதத்தில் இருந்து தங்கத்திற்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 21ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.41 ஆயிரத்தை நெருங்கும் வகையில் சென்றது.
இந்நிலையில் 2022ம் ஆண்டின் கடைசி நாளான இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 41 ஆயிரத்தை தாண்டியது. 22 கேரட் தங்கம் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து, 41 ஆயிரத்து 40 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 15 ரூபாய் அதிகரித்து 5 ஆயிரத்து 130 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டிருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.