அந்த ரெண்டாவது போட்டோவுல நான் Flat ஆகிட்டேன் – திரிஷாவிடம் வழியும் ரசிகர்கள்!
Author: Vignesh31 December 2022, 3:30 pm
ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.
சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க.
ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம். இதெல்லாம் ஒரு பக்கம் தன்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் த்ரிஷா
அந்தவகையில் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், AK 62 ( உறுதி செய்யப்படவில்லை) ஆகும். அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார்.
இது ஒருபுறமிருக்க திரிஷா அவர்கள், பொன்னியின் செல்வன் வெற்றிக்கு அடுத்ததாக குந்தவியாக நடித்து அனைவரது கவனத்தையும் கவர்ந்துவிட்டார். இந்நிலையில் தற்போது ஸ்டைலிஷ் உடையில் அம்புட்டு அழகாக போஸ் கொடுத்து லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்கள் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.