அஜித் கூட நடிக்க மாட்டனு சொன்ன பிரபல நடிகை… 23 வருடங்கள் கழித்து நடந்த கூத்த பாருங்க : தல தலதான்!!
Author: Vignesh1 January 2023, 11:45 am
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் இன்று வரை தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர். இவர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற திரைப்படத்தில் 2000 ஆம் ஆண்டில் நடித்தார். இந்த திரைப்படத்தில் மம்முட்டி, ஐஸ்வர்யா ராய், அஜித், தபு போன்ற பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.
அந்த சமயத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் டாப் நடிகையாக இருந்து வந்துள்ளார். மேலும், முதலில் கதை படி அக்கா கதாபாத்திரத்தில் நடித்த தபு தான் மம்முட்டிக்கு ஜோடியாகவும், ஐஸ்வர்யா ராய் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க இருந்தது. இளம் நடிகரான அஜித்துடன் ஜோடி சேர நடிகை ஐஸ்வர்யா ராய் மறுத்ததாக அந்த சமயத்தில் பல தகவல்கள் வெளிவந்தது.
அதன் காரணமாக கதைகள் மாற்றம் செய்யப்பட்டு அதன் பிறகு நடிகை ஐஸ்வர்யா ராய் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்தார். இப்படி ஒரு நிலையில் தற்போது 23 வருடங்கள் ஆகிவிட்டது.
அடுத்ததாக நடிகர் அஜித்தின் 62 வது திரைப்படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாகவும், அந்த படத்திற்கு நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் மத்தியில் சற்று குழப்பத்தை ஏற்படுத்து வருகின்றது. ஏனென்றால் அஜித்தை வேண்டாம் என்று சொன்ன நடிகையுடன் எப்படி இன்று நடிப்பார். மனதில் வைத்துக்கொண்டு 22 வகை பகையை தற்பொழுது ஒதுக்கி விடுவார் என்று பலரும் கூறி வருகின்றார்கள்.