யாரு இவங்க?.. அச்சு அசலாக ரேவதி போலவே இருக்கும் ஹாலிவுட் நடிகை..! வைரலாகும் புகைப்படம்..!
Author: Vignesh31 December 2022, 7:15 pm
80ஸ்-களில் நடிகை ரேவதி இளைஞர்கள் மனதில் கனவுக்கன்னியாக இடம்பிடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர்.
மண்வாசனை, தேவர் மகன், மௌனராகம், புதுமை பெண் என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளிவந்த நவரசா ஆந்தாலஜி சீரிஸில் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் ரேவதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அச்சு அசல் நடிகை ரேவதி போலவே இருக்கும் பிரபல ஹாலிவுட் நடிகை ஒருவரின் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பிரபல ஹாலிவுட் நடிகை ஆனா டி ஆர்மஸ் ( Ana de Armas ) அச்சு அசல் பார்ப்பதற்கு 80ஸ் ரேவதி போலவே இருக்கிறார்.
இவர்களுடைய இரு புகைப்படங்களை ஒன்றாக இணைத்து ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..

