புத்தாண்டு தினத்தில் அதிர்ச்சி… சிலிண்டர் விலை உயர்வு : ஓட்டல்களில் விலை உயரும் அபாயம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
1 January 2023, 11:07 am

உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கிடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போனது. இதன் காரணமாக பல்வேறு நாடுகள் எச்சரிக்கை விடுத்தப்போதிலும், கடந்த ஆண்டு கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மீது ரஷ்யா உக்ரைன் மீது குண்டுமழை தாக்குதல் நடத்தியது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையினை நிர்ணயம் செய்கின்றனர்.

வருடத்தின் முதல் நாளிலே வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையானது ரூ.25 உயர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக உணவன உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஹோட்டல்கள், டீக்கடைகள் உள்ளிட்டவற்றில் உணவுப் பொருட்களின் விலைஉயரும் அபாயம் ஏற்படும் என உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகை தகவல் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்