வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிக்கெட் விநியோகம் துவக்கம் : திருப்பதி மலையில் தள்ளுமுள்ளு, நெரிசல்.!!!

Author: Udayachandran RadhaKrishnan
1 January 2023, 11:25 am

வைகுண்ட ஏகாதசிசையை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் பிரவேச டிக்கெட் விநியோகம் துவங்கியது.

நாளை வைகுண்ட ஏகாதசி முதல் 10 நாட்கள் ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். எனவே பக்தர்களின் வசதிக்காக நாள் ஒன்றுக்கு 45 ஆயிரம் என்ற கணக்கில் நான்கு லட்சத்து 50 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகளை வைகுண்ட வாசல் பிரவேச தரிசன டிக்கெட் என்ற பெயரில் தேவஸ்தான நிர்வாகம் இலவச விநியோகம் செய்ய முடிவு செய்தது.

இதற்காக திருப்பதியில் உள்ள 10 இடங்களில் 90 கவுண்டர்கள் அமைக்கப்பட்டன. இன்று மதிய முதல் அவற்றில் டிக்கெட் விநியோகம் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் டிக்கெட்டுகளை வாங்க நேற்று மாலை முதல் பக்தர்கள் குவிந்தனர். நேற்று இரவு திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள கவுண்டரில் கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு ஆகியவை ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.

எனவே மேலும் பக்தர்கள் வந்து சேர்ந்தால் கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்த காரணத்தால் தேவஸ்தான நிர்வாகம் முன்னதாகவே டிக்கெட் விநியோகத்தை துவக்கியது. பக்தர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி செல்கின்றனர்.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 372

    0

    0