மகள் அனோஷ்காவுடன் அஜித்… குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடிய AK : இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..!
Author: Vignesh2 January 2023, 10:00 am
மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘துணிவு’. இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் ‘சில்லா சில்லா’, ‘காசேதான் கடவுளடா’, ‘கேங்ஸ்டா’ உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அடுத்த மாதம் பொங்கலை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளது.
‘துணிவு’ படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளிவந்து மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. எதிர்பார்த்ததை விட பலமடங்கு இந்த ட்ரைலர் அமைந்திருந்தது.
நேற்று புத்தாண்டு கொண்டாடிய பிரபலங்கள் தங்களுடைய குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வந்தனர்.
தற்போது நடிகர் அஜித் தனது மனைவி மகன், மகளுடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்கள் வெளியானது.
இதில், அஜித்தின் மகளை பார்த்த பலரும், ஹீரோயின் போலவே இருக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்..