சிறையில் நடந்த திடீர் துப்பாக்கிச்சூடு ; 10 காவலர்கள் உள்பட 14 பேர் உயிரிழப்பு… 24 கைதிகள் எஸ்கேப்!!

Author: Babu Lakshmanan
2 January 2023, 10:20 am

மெக்சிகோவில் சிறையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 14 சிறை கைதிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவாடட் யுரேஸ் பகுதியில் உள்ள சிறையில் ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர்கள் சிறை வளாகத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 10 சிறை காவலர்கள் மற்றும் 4 சிறைக்கைதிகள் என மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து, சிறையில் மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு நிலைமையை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இது தொடர்பாக சிக்குவாகு மாநில அரசு தரப்பு அதிகாரிகள் கூறுகையில், “நேற்று காலை 7 மணியளவில் ஆயுதங்களுடன் கூடிய வாகனங்கள் வந்ததாகவும், பின்னர், அதில் இருந்தவர்கள் திடீரென தாக்குதல் நடத்தியதாகவும் கூறியுள்ளார். இதில் 10 சிறை காவலர்கள், 4 கைதிகள் என 14 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் யார்..? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,” என தெரிவித்துள்ளார்.

  • getti melam serial actor Passed away தூக்கத்திலேயே உயிர் பிரிந்த நடிகர்.. திரையுலகம் அதிர்ச்சி..!!